Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை பழிவாங்கத் துடிக்கும் அர்ச்சனா.. மீண்டும் குடும்பத்தில் அர்ச்சனாவால் வெடிக்கப் போகும் பிரச்சனை.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

Raja Rani2 Serial Episode Update 14.02.22

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. காலையில் கடைக்கு போனால் சரவணன் கூட்டம் குவிந்து வழிவதைப் பார்த்து ஆச்சரியப் படுகிறார். நம்ப கடையா இது என ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க அப்போது அங்கு வந்த சர்க்கரை அண்ணே காலையிலிருந்தே கூட்டம் வந்துகிட்டே இருக்கு என்னால சமாளிக்க முடியல. செல்வம் வேற கடையில இல்ல என கூறுகிறார். சரி போய் படிக்கிற வேலையை பாரு நான் கடையை பார்த்திருக்கிறேன் என சரவணன் கடைக்குச் செல்கிறார். சரவணனை சமையல் போட்டியில் ஜெயித்ததற்காக பாராட்டிய மக்கள் அவரோடு செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

பாளையங்கோட்டையில் இருந்து ஒருவர் குடும்பத்தோடு வந்து சரவணனை பாராட்டிவிட்டு அவர் கடையை ஸ்வீட் வாங்கி செல்கிறார். இந்த பக்கம் வீட்டில் சிவகாமி துவைத்த புடவைகளை மடித்து கொண்டிருக்க அவரிடம் அவருடைய கணவர் செந்தில் அர்ச்சனாவிடம் நடந்த பிரச்சனையை பற்றி பேசாத என கூறுகிறார். செந்தில் நைட்டெல்லாம் தூங்காம முழிச்சிட்டு இருந்தான் நான் தான் அவன தூங்க சொன்னேன் என கூறுகிறார். ஆரம்பத்துல நிறைய இடம் கொடுத்துவிட்டு இப்போது கஷ்டப்பட்டா என்ன பண்றது என சிவகாமி சொல்கிறார்.

பாளையங்கோட்டையில் இருந்து ஒருவர் குடும்பத்தோடு வந்து சரவணனை பாராட்டிவிட்டு அவர் கடையை ஸ்வீட் வாங்கி செல்கிறார். இந்த பக்கம் வீட்டில் சிவகாமி துவைத்த புடவைகளை மடித்து கொண்டிருக்க அவரிடம் அவருடைய கணவர் செந்தில் அர்ச்சனாவிடம் நடந்த பிரச்சனையை பற்றி பேசாத என கூறுகிறார். செந்தில் நைட்டெல்லாம் தூங்காம முழிச்சிட்டு இருந்தான் நான் தான் அவன தூங்க சொன்னேன் என கூறுகிறார். ஆரம்பத்துல நிறைய இடம் கொடுத்துவிட்டு இப்போது கஷ்டப்பட்டா என்ன பண்றது என சிவகாமி சொல்கிறார்.

இந்த நேரத்தில் ரூமில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா இப்ப போய் துணியும் மடிக்கிற மாதிரி ஒரு சீன் போடலாம் என திட்டம் போடுகிறார். அதன்பிறகு பொய் புடவை எடுத்து மடிக்க அதை பிடிங்கி கொள்கிறார் சிவகாமி. பிறகு குடுங்க அத்தை துவைக்கிறேன் என சொல்ல இதெல்லாம் வைத்த புடவை என சொல்கிறார். அதன்பிறகு தொலைக்க வேண்டிய போடாத பக்கெட்டுல ஊற வைத்து இருக்கேன் என சொல்ல நான் போய் துவைக்கிறேன் என அர்ச்சனா செல்கிறார். அதெல்லாம் வேண்டாம் இந்த நேரத்துல நீ அத ஒன்னும் செய்ய தேவையில்லை என சொல்கிறார். நான் சந்தியா கிட்ட சொல்லி வேலையை வாங்கிக்கிறேன் என கூறி சந்தியாவை அழைக்கிறார்.

இந்த புடவை எல்லாம் மடித்து வைத்து விடு. துணியை ஊற வைத்து இருக்கேன் அதை துவைத்து விடு என சொல்கிறார். சரி என சந்தியா உள்ளே செல்ல அப்போது சரவணன் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் ஒருவர் 100 பேருக்கு ஸ்வீட் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கா என சொன்ன அதெல்லாம் முடியாது என சரவணன் சொல்கிறார். ஏன் என்னாச்சு என சிவகாமி கேட்க கடையில செம கூட்டம் சமாளிக்க முடியல. ‌‌ எல்லாம் சமையல் போட்டியில் ஜெயித்து அதைப் பார்த்துட்டு வந்து இருக்காங்க என் கூட போட்டோ எல்லாம் எடுத்துக்கிறாங்க. குடோனில் வாங்கி வைத்திருந்த சரக்கு எல்லாம் காலி இனி ஸ்வீட் செய்ய கடைக்கு போய்ட்டு சரக்கு வாங்கிட்டு வந்தா தான் என சொல்கிறார்.

இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷப்படுகின்றனர். அர்ச்சனா இவர் சொல்றத பாத்தா கல்லா நிரம்பி வழிவது போல அந்த காசை மட்டும் தான் அப்படியே என் கைக்கு வந்தால் எப்படி இருக்கும் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். ரூமுக்குள் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது செந்தில் போன் செய்து சரவணன் கடையில் கூட்டம் அள்ளுது. அன்னைக்கு புடவை வாங்கினால் ஸ்வீட் ப்ரீனு சொல்லி அவனுக்கு நாமம் போட பார்த்த ஆனா இன்னைக்கு அவனோட திறமைக்காக தான் கூட்டம் வந்து இருக்கு என சொல்கிறார்.

எங்க அம்மாவை ஜெயில்ல உட்கார வெச்ச இதே ஜெயில்ல தொழில் பண்றவங்களோட நீ போய் உட்கார்ந்த. இந்த வீட்ல யார் வேண்டுமானாலும் நீ பண்ணாத மறந்து உன்னை வெறுக்கலாம் ஆனால் நான் கண்டிப்பா ஏத்துக்க மாட்டேன். எல்லாம் அந்த குழந்தை இருக்கிறவரைக்கும் தான், குழந்தை பிறந்ததும் நீ வெளியே கிளம்ப வேண்டியதுதான். அதை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சிக்கோ என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான் அவளை நான் சும்மா விடமாட்டேன் பழிவாங்கியே தீருவேன் என அர்ச்சனா சொல்கிறார்.

துணிகளை மடித்து வந்து சிவகாமியிடம் கொடுக்க வந்த சந்தியாவிடம் அவர் கடையில் கூட்டம் வழியுது என கடையைப் பற்றி பேசிவிட்டு இந்த துணிகளை என் ரூமில் வைத்து விடு எனச் சொல்கிறார். மேலும் நைட்டு என்ன சமைக்கலாம் என கேட்க நான் சமைக்கிறேன் என சந்தியா சொல்கிறார். சிவகாமி சரியான சொல்ல துணிகளை வைத்துவிட்டு சந்தியா வெளியே வர உள்ளே சென்ற அர்ச்சனா சிவகாமியின் புடவை எடுத்து கத்தரிக்கோலால் கிழித்து மடித்து வைக்கிறார். பழி சந்தியாவின் மேல விழுந்து விடும் என கணக்குப் போடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 14.02.22
Raja Rani2 Serial Episode Update 14.02.22