தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவின் வீட்டுக்கு வந்திருந்த அவருடைய அண்ணன் வீட்டில் உள்ளவர்களை குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவுக்கு அழைத்திருந்தார். பிறகு அவர் வீட்டிற்கு கிளம்பும் போது வெளியில் சரவணனிடம் சந்தியாவிடம் இன்னும் மனம் விட்டு பேசுங்கள் அவளுடைய ஆசையை தெரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள் என சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரது அண்ணனை நீ மொதல்ல கெளம்பு விட்டா பேசிக்கிட்டே இருப்ப என வழி அனுப்பி வைத்தார். அதன்பிறகு ரூமுக்குள் வந்த சந்தியா தன்னுடைய அண்ணன் மகளை போலீசாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவர் வளர்ந்த பிறகு படிக்க வேண்டும் என ஒரு லெட்டர் எழுதுகிறார். இந்த நேரத்தில் உள்ளே வந்த சரவணன் என்ன அது என கேட்க என்னோட அண்ணன் பொண்ணுக்காக ஒரு கனவு கடிதம் என சொல்ல என்ன எழுதி இருக்கீங்க எனக் கேட்க அது சர்ப்ரைஸ் என கூறி விடுகிறார்.
நானும் உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் வைத்திருக்கேன் என சொல்ல அது என்ன என கேட்க என்னனு சொல்லிட்டா அப்புறம் சர்ப்ரைஸா இருக்காது என கூறுகிறார். பிறகு சரி நீங்க போயிட்டு தயாராகுங்க குழந்தைக்கு பெயர் வைக்கிற விழாவுக்கு போகணும் என சொல்கிறார்.
இந்த பக்கம் ரூமுக்குள் அர்ச்சனா சந்தியாவுடன் அண்ணன் குழந்தைக்கு எதுக்கு நகை எல்லாம் போடணும்? இத சொன்னா நம்மள வில்லியாக்குறாங்க என புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் விக்கி போன் செய்கிறார். போனை அட்டென்ட் பண்ணி பேசியபோது விக்கி உங்களுக்கு பாஸ்கரும் பார்வதியும் ஒன்றாக இருக்கிற மாதிரி போட்டோ அனுப்பி இருந்தேன் அதை எனக்கு திருப்பி அனுப்புங்கள் அதை வைத்துதான் கல்யாணத்தை நிறுத்தனும். என்னிடமிருந்த ஆதாரங்களை சந்தியா அழித்து விட்டார் என கூறுகிறார். உடனே அர்ச்சனா என்கிட்ட இருந்த போட்டோ எல்லாமே டெலிட் ஆயிடுச்சு என சொல்ல விக்கி அதிர்ச்சி அடைகிறார். இப்படி அர்ச்சனா பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் செந்தில் வந்துவிட அவர் உடனே போனில் மழுப்பி கட் செய்து விடுகிறார்.
அதன்பிறகு செந்தில் யார் கிட்ட பேசிட்டு இருந்த உன் முழியே சரியில்லை எனக் கேட்க ராங் நம்பர் என கூறுகிறார். உங்களுக்கு எப்பவுமே என்ன சந்தேகப்படுவது வேலை என சொல்ல நீ பண்ண வேலைகள் அப்படி என செஞ்சி திட்டுகிறார். பிறகு எல்லோரும் குடும்பத்தோடு சந்தியாவின் அண்ணன் மகளுக்கு பெயர் வைக்கும் விழாவுக்கு செல்கின்றனர்.
சரவணன் இதே கோவிலில் வைத்து சந்தியாவிடம் அந்த பேனாவை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார். பிறகு குழந்தைக்கு தன்னுடைய மாமியார் கையால் செயினை போட்டுவிடுகிறார் சந்தியா. இதையெல்லாம் பார்த்து அர்ச்சனா பயங்கர கடுப்புடன் முறைத்துப் பார்த்தார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 24.02.22