தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் தன்னுடைய மாமனார் மாமியார் போட்டோக்கள் ரூமுக்குள் வைத்து அவர்களை வணங்கி கொண்டு இருக்கும்போதே அதை பார்த்து சந்தியா சந்தோஷப்படுகிறார். பிறகு சரவணன் சந்தியா கலங்குவதை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார். உங்க அப்பா உங்களை போலீசா ஆக்கும், கலெக்டராக ஆக்கணும் ஏதாவது கனவு கண்டு இருப்பாரு. அது என்னனு தெரிந்தா அதை கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன் என சரவணன் கூறுகிறார்.
பிறகு இந்தப் பக்கம் அர்ச்சனா செந்திலை எழுப்பி நமக்கு பிறக்க போறது ஆணா பொண்ணா உங்களுக்கு என்ன வேணும் என கேட்கிறார். எதுவாக இருந்தாலும் அது நம்மளோட குழந்தை என கூறுகிறார். அத்தைக்கு ஒரு ஆம்பள பையனா பெத்து கொடுத்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க என சொல்ல அவங்களுக்கு பேரனோ பேத்தியோ தான் தேவை. இந்த குழந்தை அந்த குழந்தையும் ஆசைப்பட மாட்டார்கள் என கூறுகிறார். சரி நான் கடவுள் கிட்டயே கேட்டுக்கறேன் என அர்ச்சனா சீட்டு எழுதிப் போட்டு எடுக்க பெண் குழந்தை என வருகிறது. எனக்கு ஆம்பள குழந்தை தான் வேணும் நான் ஹாஸ்பிடல்ல செக் பண்ணி பார்க்க போறேன் என சொல்ல அப்படியெல்லாம் பண்ண உன்னை ஜெயில்ல தான் புடிச்சு போடுவாங்க போய் களி தின்னு, நீ எல்லாம் அந்த கடவுளே வந்தா கூட திருந்த மாட்ட என கூறுகிறார்.
அதற்கு அடுத்ததாக சந்தியாவின் அண்ணி சந்தியா எழுதி வைத்த லெட்டரை தேட அவருடைய கணவர் அதை சரவணனிடம் சேர்த்து விட்டதைப் பற்றி கூறுகிறார். சந்தியாவின் அண்ணியும் நீங்க செய்தது தான் சரி என கூறுகிறார்.
இந்த பக்கம் சிவகாமி தன்னுடைய கணவரிடம் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நல்லபடியா நடந்துச்சு நமக்கும் பேரனோ பேத்தியோ பரந்த இந்த மாதிரி பெருசா செய்யணும் என பேசிக் கொள்கின்றனர். இந்த நேரத்தில் சரவணன் கடையிலிருந்து சந்தியாவிற்கு புடவை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதை சிவகாமியிடம் காண்பிக்க அவர் புடவை ரொம்ப நல்லா இருக்கு என கூறுகிறார்.
பிறகு சரவணன் உள்ளே போய்க் கொண்டிருந்த சந்தியா எழுந்து கொள்கிறார். பாராட்டு விழாவில் எல்லோரும் உங்களது பேச்சை கேட்க ஆவலோடு இருப்பார்கள் என்ன பேசுறதுன்னு யோசித்தீர்களா என கேட்க அதெல்லாம் எதுவும் யோசிக்க நீங்க என்ன பேசுவதுனு எழுதிக் கொடுங்க நான் அப்படியே பேசிட்டு வரேன். என்னை இந்த அளவுக்கு மாற்றியது நீங்கதான். நான் என்ன வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்றா என சரவணன் சொல்ல சரி நான் எழுதி தர அதை பேசுங்க என சந்தியா கூறுகிறார். பிறகு சந்தியா எழுதி முடிப்பதற்குள் சரவணன் தூங்கிவிடுகிறார்.
மறுநாள் காலையில் சந்தியாவிடம் சரவணன் எடுத்துட்டீங்களா என கேட்க நைட்டு எழுதிட்டேன் நீங்க தூங்கிட்டிங்களா அதனால் உங்களை எழுப்பல. இந்தாங்க படிச்சு பாருங்க என கொடுக்க நான் நேரடியா அங்க படிக்கிறேன் அப்பதான் ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என சொல்கிறார். பிறகு சரவணன் உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் என சொல்லி புடவையை கொடுக்கிறார். சந்தியா ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று சந்தோஷப்படுகிறார். பிறகு சந்தியா எழுதிவைத்த லெட்டரை மறக்காம எடுத்துக்கோங்க என கூறுகிறார். ஏற்கனவே அங்கு சந்தியா அண்ணன் மக்களுக்காக எழுதிய லெட்டர் கீழே விழுந்து கிடக்கும் நிலையில் இவர் எழுதி வைத்த பேப்பரும் கீழே விழுந்து விடுகிறது. தவறுதலாக சரவணன் இந்த லெட்டரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
