Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனாவால் சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

Raja Rani2 serial Episode Update 31.01.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. தனது அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பதாக சொல்லிவிட்டு அர்ச்சனா தன்னுடைய கணவருடன் வெளியே வந்துள்ளார். இந்த இரண்டு நாளில் எப்படியாவது கருவை கலைத்துவிட வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.

இதனால் வெளியே வந்த இவர்கள் மிகக் குறைந்த காசில் ரூம் கிடைக்கும் லாட்ஜாக பார்த்து ஒரு லாட்ஜில் ரூம் போட்டு தங்கி உள்ளனர். ஆரம்பத்திலிருந்தே அர்ச்சனாவிற்கு இந்த லாட்ஜ் ஏதோ தப்பாக படுகிறது என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருவரும் ஒரு வழியாக ரூமுக்கு சென்றதும் ஏசி போட அர்ச்சனா கூறுகிறார். ஆனால் கரண்ட் இல்லாததால் கடுப்பான அவர் போன் போட்டு கரண்ட் இல்லை எனக் கேட்க லாட்ஜில் வேலை பார்ப்பவர் ஒரு மார்க்கமான குரலில் பதில் சொல்கிறார். பிறகு ஒரு வழியாக கரண்டு வந்துவிடுகிறது.

செந்தில் அர்ச்சனாவை கொஞ்ச உங்க மேல ஒரே வியர்வை நாத்தமாக இருக்கு முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க என சொல்ல செந்தில் குளிக்கச் செல்கிறார். குளிப்பதற்கு முன்னர் சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு குளிக்க எனக்கு ரொம்ப பசிக்குது என கூறுகிறார். சரி என செந்தில் சாப்பாடு வாங்கிட்டு வர வெளியே செல்கிறார்.

இந்தப் பக்கம் சந்தியா வீட்டில் பொய் சொல்லிவிட்டு அர்ச்சனா ஹாஸ்பிடலுக்கு சென்று மங்கலம் என்ற பெயரில் யாராவது அட்மிட் ஆகி இருக்கிறார்களா என விசாரிக்கிறார். ஆனால் அப்படி யாரும் அங்கு அப்டேட் ஆகவில்லை என மருத்துவமனையில் சொல்லி விடுகின்றனர். இதனால் அத்தையை போலீசில் புகார் அளித்து ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தவர் அர்ச்சனா தான் என்ற சந்தேகம் சந்தியாவுக்கு அதிகமாகிறது.

இதனையடுத்து அவர் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். அங்கு சென்று 8 மாதத்திற்கு முன்னர் என்னுடைய அத்தை மீது ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருந்தது அது பொய் புகார் என ஏற்கனவே தெரியும். அதை கொடுத்தது யார் என தெரிந்து கொள்ள வேண்டும் அதை கொஞ்சம் சொல்ல முடியுமா என கேட்கிறார். முடிந்துபோன கேஸை எதற்கு திரும்பவும் கேட்கிறீர்கள்? எங்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு என போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட சந்தியா தயவு செய்து கொஞ்சம் உதவி செய்யுங்கள் என கேட்கிறார். இதனையடுத்து அவரது என் போன் நம்பரை வாங்கிக்கொண்டு பார்த்து சொல்கிறேன் என சொல்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 Raja Rani2 serial Episode Update 31.01.22

Raja Rani2 serial Episode Update 31.01.22