தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேருக்கு நேராக மோத உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாகி இருக்கும் இப்படங்கள் பற்றின தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் 1995 ஆம் ஆண்டில் அஜித்-விஜய் இருவரும் சேர்ந்து நடித்து வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தை ஜனவரி 6ஆம் தேதியான நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
