Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதிதி ஷங்கரை விமர்சிக்க வேண்டாம்.. விமர்சனங்களுக்கு ராஜலட்சுமி கொடுத்த பதில்

rajalakshimi about aditi-shankar

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் தற்போது கார்த்தியின் “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதிதி தனது முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல ரசிகர்களை தனது க்யூட்டான பேச்சு மற்றும் நடவடிக்கையால் கவர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் நாளை திரைக்கு வர தயாராக இருக்கும் விருமன் திரைப்படத்தின் பாடல் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மதுர வீரன்’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து அதிதி பாடியுள்ளார்.

ஆனால் இந்த பாடலை முதலில் பாடியவர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமியாம். ஆனால் அவரின் குரலை நீக்கிவிட்டு தற்போது அதிதி பாடிய வரிகளை படகுழு இணைத்துள்ளார்களாம். இதனால் பாடகி ராஜலட்சுமி தற்போது மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வைரலானது.

இதனால் தற்போது நடிகை அதிதி ஷங்கரை பலரும் விமர்சிக்கும் விதமாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி அதிதி ஷங்கருக்கு ஆதரவாக “சினிமாவில் இதுபோல நடப்பது எல்லாம் சாதாரணம். யாரும் நடிகை அதிதி ஷங்கரை இதற்காக விமர்சிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

rajalakshimi about aditi-shankar
rajalakshimi about aditi-shankar