Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம் படத்தின் ருசிகர லேட்டஸ்ட் தகவல்!!

rajamouli mahabharatam

மாவீரன் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இயக்குனர் தான் ராஜமௌலி.

ஸ்டூடண்ட் நம்பர் 1எனும் படத்தின் மூலம் திரையுலகில் ஒரு இயக்குனராக அறிமுகமானார் தற்போதைய பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி.

இதன்பின் சிம்ஹதிரி, sye உள்ளிட்ட படங்களை இயக்கி திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முத்திரை பதித்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான நானி, மாவீரன், பாகுபலி 1 & 2 உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்தது.

தற்போது ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி. ஆரை வைத்து RRR எனும் படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் கதாபாத்திர டீஸர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தான் ராஜமௌலியின் மகாபாரதம்.

இப்படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பதை கூடிய விரைவில் தெரிந்து கொள்வோம்.

இந்நிலையில் இப்படத்தை குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் ராஜமௌலி : இப்படம் இந்தியாவில் உருவாக இருக்கும் படம். இப்படம் 6 முதல் 7 பாகங்கள் கொண்ட திரைப்படம். இப்படத்தின் இறுதி பாகம் உருவாக கண்டிப்பாக 2040ஆம் ஆண்டு ஆக வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.