Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜோசியர் சொன்ன உண்மை. அர்ச்சனாவுக்கு காத்திருந்த ஷாக். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episdoe update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் செந்திலை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது செந்தில் எல்லாம் எனக்குத் தெரியும் நீ உன் வேலையை பாரு என சொல்லி அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார்.

அர்ச்சனா பரந்தாமன் கொடுத்த எண்ணெய் டின்னை எப்படியாவது சரவணன் குடோனில் வைத்து விட வேண்டும் என முயற்சி செய்ய மயிலு குறுக்க நெடுக்க வந்து கொண்டிருக்க பிறகு மயிலுவை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு ஒரு வழியாக குடோனில் எடுத்துச் சென்று அந்த எண்ணையை வைத்து விடுகிறார்.

அடுத்து ஆதி தன்னுடைய நண்பனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க அவர் 20000 பணத்தை கொடுத்து போனவாரம் பத்தாயிரம் கொடுத்த அது இப்போ 20 ஆயிரம் திரும்ப வந்ததுக்கு இதுதான் பிசினஸ் என சொல்ல பேராசை அடையும் ஆதி 20, 000-ஐ 40,000 ஆக மாற்றி கொடுக்க முடியுமா என கேட்க இந்த சின்ன அமௌன்ட் எல்லாம் மாத்தி கொடுக்க முடியாது ரெண்டு லட்சம் ரூபாய் கொடு என்ன சொல்ல ஆதி ஜெசி வீட்டில் பணத்தை ஆட்டைய போடலாம் என முடிவெடுக்கிறார்.

அடுத்து அர்ச்சனாவும் செந்திலும் ஜோசியரை பார்க்க வர அப்போது அவர் அர்ச்சனாவுக்கு பிறந்தது பெண் குழந்தை தான் ஆண் குழந்தை பிறந்து இருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக அடித்து சொல்ல அர்ச்சனா அதிர்ச்சியாக செந்தில் நீ எல்லாம் என்ன ஜோசியர் என கோபப்பட்டு அங்கிருந்து வந்து விடுகிறார். நல்ல வேலை செந்திலுக்கு சந்தேகம் வரல என சந்தோஷப்படுகிறார்.

பிறகு கடைக்கு கிளம்பும் சரவணன் எண்ணெய் இல்லை என குடோனுக்குச் சென்று அர்ச்சனா வைத்த அதே எண்ணெய் எடுத்துக் கொண்டு கடைக்கு கிளம்பும்போது கால் தடுக்கி கீழே விழ இன்றைக்கு கடைக்கு போக வேண்டாம் என தடுக்கிறார். ஆனால் சரவணன் கால் தடுக்கி விழுந்தது என்னுடைய தவறுதான் என சொல்லி கடைக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோ மொபைல் எண்ணெயில் கலப்படம் இருப்பதாக சொல்லி சரவணனை போலீசார் கைது செய்கின்றனர்.

rajarani 2 serial episdoe update
rajarani 2 serial episdoe update