தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா சரவணன் பேசிய வீடியோவை பார்த்துவிட்டு ஃபோன் போட்டு என்ன நடிகராக ஆகிட்டீங்க போல என கிண்டல் அடிக்க சரவணன் என்ன சொல்றீங்க என கேட்க அல்வா கிண்டிய வீடியோ பற்றி பேசுகிறார்.
அடுத்ததாக சந்தியா வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் என சொல்கிறார். பிறகு மறுநாள் காலை சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு எலக்சன் கிளம்புவதாக சொல்ல வாழ்த்து சொல்கிறார் சந்தியா. அதோட சாமியின் போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் தான் அவருக்கு துணையா இருக்கணும் என வேண்டிக் கொள்கிறார்.
அதன் பின்னர் சரவணன் செந்தில் என இருவரும் தயாராகி வெளியே வர அர்ச்சனா நீங்க முதல்ல ஆசீர்வாதம் வாங்குங்க, யார் ஆசீர்வாதம் வாங்கறாங்களோ அவங்க தான் ஜெயிப்பாங்க என சொல்லி சிவகாமி இடம் ஆசீர்வாதம் செய்ய சொன்ன அவர் அதெல்லாம் பண்ண முடியாது இரண்டு பெரும் ஆரத்தி எடுத்துக்காட்டும் என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் அவர்களுக்கு இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? என கூறுகிறார்.
பிறகு தேர்தல் பரபரப்பாக தொடங்கி எல்லோரும் ஓட்டுப் போட ஆரம்பிக்க சிவகாமி ஓட்டு போட போக சரவணன் அழைத்துப் போக அப்போது வந்த செந்தில் என்ன நீ கூட்டிட்டு போய் ஓட்டு வாங்கலாம்னு பாக்குறியா என சொல்லு வாக்குவாதத்தில் ஈடுபட பிறகு சிவகாமி தனியாக சென்று ஓட்டு போட்டு விட்டு வருகிறார்.
தேர்தல் முடிவடைந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. பிறகு செந்தில் தனியாக நிற்பதால் சிவகாமியும் ரவியும் அவனுடன் சேர்ந்து நிற்கின்றனர். பரந்தாமன் தேர்தலில் எண்ணிக்கை முடிவடைந்து வெளியே வர செந்தில் என்னாச்சு தலைவரே எனக்கு அவர் அமைதியாகவே இருக்கிறார்.
பிறகு நடந்து முடிந்த இந்த தேர்தலில் சரவணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செந்திலை விட ஐந்தாயிரம் ஓட்டுக்கள் அதிகமாக பெற்று வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்க சரவணன் தரப்பினர் உற்சாகமடைந்து கொண்டாடுகின்றனர். செந்திலும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.