தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அர்ச்சனா மயிலுவிடம் காபி கேட்க அப்போது ஆதி, ஜெஸி என இருவரும் வெளியே வந்து தங்களுக்கும் காபி வேண்டும் என கேட்க அப்போது அர்ச்சனா சந்தியா பற்றி விசாரிக்க ஜெசி யாரும் போனை எடுக்கல என சொல்கிறார்.
இந்த நேரத்தில் அர்ச்சனா இருவரையும் அமைதியாக இருக்க சொல்லி பக்கத்தில் இது குழந்தை அழுவுற மாதிரி கேட்குது தானே என கேட்க அப்படி எதுவும் கேட்கலை என இருவரும் சொல்ல செந்திலும் வர செந்திலும் எந்த சத்தமும் கேட்க என சொல்ல அர்ச்சனா ஒரு நிமிஷம் இருங்க என பக்கத்துக்கு வீட்டுக்கு ஓடி கதவை தட்டுகிறார்.
அங்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி பால் கட்டிக் கொண்டதால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை அதனால் பசியில் அழுகிறது என சொல்ல அர்ச்சனா பால் கொடுக்கிறார். உனக்கு சரியாகும் வரை குழந்தையை நானே வைத்து பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல அதற்கு அந்த பெண்மணி மறுப்பு தெரிவிக்கிறார். எனக்கு செந்தில் உட்பட எல்லோரும் வந்து அர்ச்சனாவை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அதன் பிறகு சந்தியாவை வீட்டுக்கு கூட்டி வந்து ஆரத்தி எடுத்து வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். காயம் பலமாக இருப்பதாக அர்ச்சனா பரிதாபப்படுகிறார். பிறகு ஆதி ஆபீசுக்கு வர அங்கு விசிலென்ஸ் ஆபீஸர்ஸ் ஆய்வு செய்ய ஆதி அதிர்ச்சி அடைகிறான்.
பிறகு சந்தியா அர்ச்சனாவிடம் சரவணன் தெரிந்து இந்த தேர்தலில் நிற்கல என சொல்ல இப்போ எதுக்கு அந்த விஷயம் அதை நான் மறந்துவிட்டேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்தியா இனி போலீஸ் பயிற்சிக்கு போக வேண்டாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.