Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை பாராட்டிய கௌரி மேடம். சரவணனுக்கு கொடுத்த விருது. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி, ஜெஸ்ஸி என இருவரும் சிவகாமியை சமாதானம் செய்ய முயற்சி செய்ய சிவகாமி கோபத்தை மட்டுமே காட்டுகிறார். இந்த வீட்ல இருந்து யார் வேணும்னாலும் அந்த விழாவிற்கு போயிட்டு வாங்க, என்னை கூப்பிடாதீங்க என கோபப்படுகிறார்.

மறுநாள் காலையில் சென்னையில் பட்டமளிப்பு விழா தொடங்கி கௌரி மேடம் இதுவரை என்னுடைய கரியரில் இந்த மாதிரி ஒரு திறமையான பேட்ச்சை பார்த்ததில்லை என பாராட்டி பேசுகிறார். பிறகு அனைவருக்கும் பட்டமளிக்கப்படுகிறது.

ஹோம் மினிஸ்டர் ஓவரால் சாம்பியன்ஷிப் போன்ற சந்தியாவுக்கு பதக்கம் கொடுத்து பாராட்டுகிறார். பிறகு சரவணன் இருக்க குடிமகன் என்ற விருதை வழங்கி பாராட்டுகிறார். அடுத்து சேத்தன் சந்தியா அப்துல் என மூவரும் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இனிமே ஒருத்தரை ஒருத்தர் தினமும் பார்க்க முடியாது. ஆனால் யாரும் யாரையும் மறந்து விடக்கூடாது தொடர்ந்து போனில் காண்டாக்ட்டில் இருக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

அப்போது அங்கு வரும் கௌரி மேடம் நான் சிறந்த பயிற்சியாளராக வந்த போது எனக்கு ஒருத்தங்க கொடுத்தது இந்த செயின், உன்ன விட திறமைசாலியான ஒருத்தர நீ பார்க்கும்போது அவங்களுக்கு இதை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். 14 வருடமாக நான் அப்படி யாரையும் பார்த்ததில்லை. இப்போ சந்தியாவை பார்க்கிறேன் என சந்தியாவை பாராட்டி அந்தச் செயினை கொடுக்கிறார்.

இந்த பக்கம் வீட்டில் சரவணன் சந்தியாவை வரவேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிவகாமி வெளியே வந்து பார்த்து இதெல்லாம் தேவையா என பேசுகிறார். எல்லா ஏற்பாடுகளும் முடிந்து சந்தியாவுக்காக காத்துக் கொண்டிருக்க அப்போது திடீரென கரண்ட் கட் ஆக சிவகாமி அபசகுணம் என நினைக்கத் தொடங்குகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani 2 serial episode update
rajarani 2 serial episode update