Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆதியை அடித்த சரவணன்..குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani 2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு சிவகாமி சந்தியாவை தத்தி தத்தி என திட்ட சந்தியா அழுது கொண்டே ரூமுக்குள் சென்று அப்பா அம்மா போட்டோவை பார்த்து புலம்பி கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் சரவணன் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் நீங்க எதுக்கு அழறீங்க என சொல்ல அப்போது அர்ச்சனா அந்த பணத்தை எடுத்து வைத்து இருப்பது சந்தியாவே தான்.

அவளே தான் பணத்தை காணவில்லை என நாடகம் போடுகிறார் என சொல்ல சரவணனின் அப்பா போலீசில் புகார் அளிக்கலாம் என சொல்ல ஆதி அதெல்லாம் எதுக்கு என சத்தம் போடுகிறான். சிவகாமி போலீஸ் எல்லாம் போகக்கூடாது நான் ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன் என கூறுகிறார். இத பத்தி நீ என்ன நினைக்கிற ஆதி என சரவணன் கேட்க அதிர்ச்சியாகும் அவன் நான் என்ன சொல்றது அர்ச்சனா அண்ணி சொல்றதையே யோசித்துப் பார்க்கலாம் என சொல்ல சரவணன் ஆதியை அடித்து வெளுக்க அனைவரும் அவனைத் தடுக்கின்றனர்.

சிவகாமி சரவணனை தடுத்து அவரை அறைந்து உன் பொண்டாட்டியை சொன்னதும் உனக்கு அவ்வளவு கோபம் வருதா? அவனை எதுக்கு அடிக்கிற என சொல்ல சந்தியா பணத்தை திருடியது யாருன்னு எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்க. அது சொன்னா நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் மறைச்சாங்க என சொல்லி அந்த ஐந்து லட்சம் பணத்தை திருடியது ஆதி தான் என்ற உண்மையை உடைக்கிறார்.

இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக சிவகாமி ஆதியை அறைந்து நீ தான் பணத்தை திருடினியா என கேட்க அவன் ஆமாம் என்று சொல்ல உடைந்து போகிறார். சரவணன் செந்தில் சிவகாமி ரவி என எல்லோரும் ஆதியை திட்டி அடிக்கின்றனர். சரவணன் இனிமே உனக்கு இந்த வீட்டில இடம் கிடையாது வெளியே போ என துரத்த ஆதி எல்லோரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறான்.

ஜெஸ்ஸி பணக்கார வீட்டு பொண்ணு என்பதால் வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தேன் என சொல்ல அதுக்கு நீ உன் சொந்த காசுல வாங்கி கொடுக்கணும் இல்லனா பிச்சை எடுக்க வேண்டியதுதானே என சரவணன் ஆவேசமாக பேசுகிறார். சந்தியா தடுத்து நிறுத்தி இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க தாங்க மாட்டீங்கனு தான் நான் சொல்லல. அங்க ஜெஸ்ஸி வயித்துல குழந்தையோட நிச்சயதார்த்தம் வரை வந்து காத்துக்கிட்டு இருக்கா. இது எல்லாத்தையும் அப்படியே மறந்துவிடலாம் அது தான் இந்த குடும்பத்துக்கு நல்லது. ஆதியை நாம பேசி சரி பண்ணிக்கலாம் என சொல்ல சிவகாமி நீ இந்த வீட்டு மருமக இல்ல, நீதான் சரியான குடும்பத் தலைவி என பாராட்டுகிறார். என் வயித்துல பிறக்காத மகள் என சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 rajarani 2 serial episode update

rajarani 2 serial episode update