தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆம்புலன்ஸ்சில் கடத்தப்பட்ட பணத்தை சந்தியா கைப்பற்றியதால் அந்த விஷயம் கவிதாவுக்கு தெரிய வர கவிதா வீரமணிக்கு போன் போட்டு அந்த பணத்தை எப்படியாவது திருப்பிக் கொண்டு வர வேண்டும் என சொல்ல வீரமணி ரவுடிகளுடன் சேர்ந்து சந்தியாவை வழி மறித்து தாக்க முயற்சி செய்கிறான்.
அங்கு வரும் சரவணன் எல்லோரையும் அடித்து துவம்சம் செய்ய போலீஸ் சம்பவ இடத்திற்கு வர சந்தியா அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ரிமாண்ட் செய்ய சொல்கிறார். இந்த பக்கம் சரவணன் சந்தியா வீட்டில் இல்லாத காரணத்தினால் சிவகாமி இவ்வளவு காலையில் எங்க போனாங்க என சத்தம் போட்டுக் கொண்டிருக்க அப்போது இருவரும் வீட்டிற்கு வருகின்றனர்.
அவர்களிடம் எங்க போனீங்க எனக் கேட்க சந்தியா ரோந்து பணி என வாய் திறக்க உடனடியாக சரவணன் ரோந்து பணி போகும்போது திருடர்கள் யாராவது பார்த்தால் அவர்களை விரட்டி பிடிக்க வேண்டும் என்பதற்காக ரன்னிங் பயிற்சி மேற்கொள்ள போனதாக சொல்கிறார். மேலும் அவங்களுக்கு பாதுகாப்பாக நான் போனேன் என சொல்ல சிவகாமி அதை வீட்டில் இருக்கும் உங்ககிட்ட சொல்லிட்டு போக மாட்டீங்களா என கேட்க அப்பா கிட்ட சொல்லிட்டு போனதாக ரவியை கோர்த்து விடுகிறார் சரவணன்.
அதன் பிறகு ரவியும் ஒரு வழியாக இந்த விஷயத்தை சமாளிக்க சிவகாமி நம்பி விடுகிறார். மறுநாள் காலை ரவி பேப்பரை படிக்கும்போது அதில் சந்தியா பணத்தை பறிமுதல் செய்த விஷயம் செய்தியாக வந்திருக்க இது சிவகாமி கண்ணில் படவே கூடாது என பேப்பரை மறைத்து விட சிவகாமி டிவியை போட சொல்ல பிளக்கை பிடுங்கி டிவி ஒர்க் ஆகவில்லை என சொல்லி சமாளிக்கிறார்.
அதன் பிறகு சரவணன் சர்க்கரையுடன் வண்டியில் சென்ற போது ஹோட்டலில் பணம் வாங்காத விஷயம் சரவணனுக்கு தெரிய வருகிறது. மறுபக்கம் ஆதியால் சந்தியாவுக்கு ஹோட்டலில் பணம் வாங்காத விஷயம் தெரிய வர இருவரும் ஹோட்டலுக்கு வருகின்றனர். சந்தியா ஹோட்டலுக்கு வருவதற்குள் சரவணன் பணத்தை கட்டிவிட அதைப் பார்த்த சந்தியா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.