rajarani2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. தேர்தலில் நீங்க கண்டிப்பா கண்டிருக்க வேண்டும் என அர்ச்சனா சொல்லிக் கொண்டிருக்க அப்போது ரவி ரூமுக்குள் வர செந்தில் வாங்கப்பா என அழைக்கிறார். தேர்தல் விஷயத்தில் என்னப்பா முடிவு பண்ணி இருக்க என கேட்க நான் தான் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேனே என கூறுகிறார். பதவி ஆசை உன் கண்ண மறைக்குது நீ தப்பானவன் பக்கம் நிக்கிற என சொல்ல நான் ஜெயிச்ச பிறகு மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பா செய்வேன் என செந்தில் கூறுகிறார்.
அடுத்து ரவி சரவணன் சென்று தேர்தலில் இருந்து நீ விலகி விடலாமே என கேட்க செந்தில் தவறான பாதையில் போறான் அவனை காப்பாற்ற நிச்சயம் நான் இந்த தேர்தலில் நின்றுதான் ஆக வேண்டும் என கூறுகிறார். செந்தில் அவனாகவே யோசித்து தேர்தலில் நிற்பதாக சொல்லியிருந்தால் நான் விலகி இருப்பேன் ஆனால் அவன் பரந்தாமன் பேச்சை கேட்டுக் கொண்டு நிற்கிறான் இது அவனுக்கு நல்லதல்ல என கூறுகிறார்.
அடுத்ததாக சந்தியா இன்னைக்கு பிராக்டீஸ் இல்லை என ஷாப்பிங் கிளம்ப அப்போது சரவணனுக்கு ஃபோன் போட சரவணன் தேர்தலுக்கு நாமினேஷன் செய்ய போகும் விஷயத்தை சொல்ல சந்தியா வாழ்த்து கூறுகிறார். அடுத்து மறுநாள் சிவகாமி மற்றும் அவருடைய கணவரும் வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது செந்தில் ஆதரவாளர்கள் நாமினேஷன் செய்ய அவரை அழைத்துச் செல்ல வருகின்றனர்.
பிறகு அர்ச்சனா ஆசிர்வாதம் பண்ணுங்க என செந்தில் ஆசீர்வாதம் வாங்க வைக்கிறார். பிறகு இவர்கள் கிளம்பிச் செல்ல சரவணனின் ஆதரவாளர்கள் வீட்டிற்கு வருகின்றனர். சரவணன் இந்த தேர்தலில் நாங்கள் நிற்கிறது உங்களுக்கு பிடிக்கலைன்னு எனக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும் செந்திலை காப்பாற்ற வேறு வழி இல்லை. நான் செந்திலுக்கு எதிராக நிற்கல பரந்தாமனுக்கு எதிராகத்தான் இருக்கிறேன் என கூறுகிறார் சரவணன். பிறகு அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு நாமினேஷனுக்கு கிளம்ப சிவகாமி கண்ணீர் விட்டு அழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Dawood Trailer | Datho Radharavi, Linga, Saraa | Prashanth Raman | Rakesh Ambigapathy
Theekkoluthi Lyric Video | Bison Kaalamadan | Dhruv Vikram, Anupama Parameswaran | Mari Selvaraj |…
Kumaara Sambavam Official Trailer | Kumaran, Payal | Balaji Venugopal | Achu Rajamani
Kaava Kaade Lyric Video | Thandakaaranyam | Dinesh | Kalaiyarasan | Athiyan | Justin Prabhakaran…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியல்…
தாவணியின் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி சங்கர். தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான…