Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சரவணனை நக்கலாக பேசிய பரந்தாமன். அதிர்ச்சியில் சந்தியா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் கடை வீதியில் ஒவ்வொரு கடையாக சென்று ஓட்டு சேகரிக்க அப்போது பரந்தாமன் செந்திலுடன் வர சரவணன் நக்கலாக பேச பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அதன் பிறகு நடக்கும் இடத்தில் சந்தியா துப்பாக்கிச்சூடும் பயிற்சியில் குறி தவறி சுட்டுக் கொண்டே இருக்க அப்துல் சந்தியாவை திட்ட பிறகு கௌரி மேடம் வந்து நான் பார்த்துக்கிறேன் என சொல்லி சந்தியாவை சுட சொல்ல யாரோ ஒருவர் கௌரி மேடத்தில் கையில் சுட்டு விடுகின்றனர். ஆனால் சந்தியா சுட்டு விட்டதாக தவறாக நினைத்துக் கொள்ள பிறகு யாரும் தீவிரவாதிகள் இருப்பது போல கௌரி நடவடிக்கை தெரிய வர மொத்த பேரும் ஒன்றாக காட்டுக்குள் செல்கின்றனர்.

அதன் பிறகு கௌரி மேடத்தை தீவிரவாதிகள் சுற்றி வளைக்க எல்லோரையும் மேடம் கேம்பிற்கு செல்ல சந்தியா மட்டும் அவரது பேச்சை தீவிரவாதிகளிடம் சண்டை போட முயற்சி செய்து அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். கடைசியில் அவர்கள் எல்லோரும் கௌரி மேடம் செட்டப் என தெரிய வருகிறது. மேலும் சந்தியா ஹையர் ஆபிசரின் பேச்சை மீறி நடந்து கொண்டது தவறு என கௌரி மேடம் திட்டுகிறார்.

அதேபோல் உண்மையான தீவிரவாதிகள் கௌரி மேடமை கடத்த திட்டமிட்டு வந்த நிலையில் அங்கு சந்தியாய் இருப்பதை பார்த்து இப்போதைக்கு இவங்கள கடத்த முடியாது, ரிஸ்க்கான விஷயம் என செல்வம் கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது..

rajarani2 serial episode update
rajarani2 serial episode update