Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை திட்டிய சிவகாமி. அதிர்ச்சியில் அர்ச்சனா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani2 serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவகாமி வீட்டை துடைத்துக் கொண்டிருக்க அப்போது சந்தியா போனில் பேசிக்கொண்டே மார்ச்சரியிலிருந்து வீட்டுக்குள் வர சிவகாமி அதைக்கேட்டு சந்தியாவை திட்டுகிறார்.

வெளியில் இருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு வீட்டை திரும்பவும் துடை என பனிஷ்மென்ட் கொடுக்கிறார். சந்தியா வீட்டை துடைத்து கொண்டிருக்க அப்போது அவருடைய ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வர பிறகு சந்தியா வேலை முடித்துவிட்டு வெளியே வரும் வரை காத்திருக்கின்றனர்.

அதன் பிறகு ரவுடியை பிடிக்க 24 மணி நேரம் மட்டுமே எஸ்பி டைம் கொடுத்துள்ளதால் என்ன செய்வது என சந்தியா கலந்துரையாட சரவணன் விஷயத்தை கேட்டு அறிகிறார். பிறகு சிவகாமியின் அர்ச்சனாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்ன ஆச்சு என பாருங்க என சிவகாமியிடம் கொடுக்க குழந்தைக்கு அம்மை போட்டு இருப்பதாக சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.

அர்ச்சனா குழந்தையை பார்க்க பக்கத்து வீட்டுக்கு செல்ல சிவகாமி தடுத்து நிறுத்தி ரூமுக்கு அனுப்பி வைக்க செந்தில் அர்ச்சனாவிடம் ஆசைக்காக நெருங்கி வர நெற்றியில் பட்டையுடன் முகத்தை காட்டி பயமுறுத்துகிறார் அர்ச்சனா. பக்கத்து வீட்டு குழந்தைக்கு அம்மை போட்டு இருப்பதால் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். அடுத்து சந்தியா ரூமுக்குள் சரவணன் ஆசையாக பேசி ரொமான்ஸ் செய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

rajarani2 serial episode update

rajarani2 serial episode update