Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெஸ்ஸியை திட்டிய ஆதி.. ரொமான்ஸ் செய்யும் சந்தியா சரவணன்..இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

rajarani2 serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த ஜெசிக்கு காபி கொடுத்து வரவேற்கின்றனர். அதன் பிறகு ஜெஸியின் அப்பா அம்மா வந்து அவளுடைய நகைகள் சீர் சனம் என அனைத்தையும் கொடுக்க இவ்வளவு நகையா என அர்ச்சனா வாய் பிளக்கிறார். அடுத்ததாக ஜெஸ்ஸியின் அப்பா அம்மா வீட்டுக்கு கிளம்ப அவர்களை கண்ணீரோடு வழி அனுப்பி வைக்கிறார்.

பிறகு சிவகாமி ஜெஸ்ஸியை அழைத்துச் சென்று சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என சத்துமாவு கஞ்சி காய்ச்சி கொடுத்து சாப்பிட வைக்கிறார். பிறகு ஜெஸ்ஸி இந்த விஷயத்தை சந்தோஷமாக சென்று ஆதியிடம் சொல்ல அவன் ஒரு மாதிரியாக பேச உனக்கு என்ன ஆச்சு என கேட்க உன்னால எவ்வளவு அசிங்கப்பட்டேன் தெரியுமா? உனக்கு இப்போ சந்தோஷம் தானே? நீ என்னை யார் கிட்ட வேணாலும் புருஷன் சொல்லிக்கலாம் நான் உனக்கு என்னைக்கும் பொண்டாட்டி என்ற அந்தஸ்தை தரமாட்டேன். இந்த ரூமுக்குள்ள நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் இருந்துக்கலாம் வெளியே சந்தோஷமா இருக்க மாதிரி நாடகம் ஆடிட்டு போக வேண்டியதுதான் என சொல்ல ஜெஸ்ஸி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வரும் சந்தியா சரவணன் குளிருக்கு இதமாக ரொமான்ஸ் செய்ய இருவரும் முதலிரவை கொண்டாடி விடுகின்றனர். பிறகு மறுநாள் காலையில் சரவணன் தலையில் கழுத்தில் முத்த தடயத்தோடு வெளியே வந்து உட்கார அதைப் பார்த்து ஆதி பார்வதி அர்ச்சனா என எல்லோரும் சிரிக்கின்றனர். பிறகு சந்தியா இதை கவனித்து சரவணனை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 rajarani2 serial episode update

rajarani2 serial episode update