Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 171 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்

rajini-171-movie latest update

மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் ,இப்படத்தின் கதையை இனிதான் எழுதவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ‘தலைவர் 171’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

rajini-171-movie latest update
rajini-171-movie latest update