தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் விவாகரத்து அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பிள்ளைகளின் நலனுக்காக ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் அறிவுரை வழங்கி வந்தனர். ஆனாலும் தற்போது வரை இவர்கள் சேர்ந்து வாழ்வதாக தெரியவில்லை.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அது தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா என கேட்க இவர்களின் திருமணத்திற்கு நான் காரணமில்லை மீடியாக்கள் தான் காரணம் எனக் கூறியுள்ளார். நிர்ப்பந்தத்தின் காரணமாக வைத்து திருமணம் நடைபெற்றது என சொல்லியுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷை தான் திருமணம் செய்து கொள்வேன் என அடம் பிடித்ததால் தான் இவர்கள் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. தனுஷை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்பதால் பிற்காலத்தில் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என ரஜினி சொல்லியும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.