Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினி பட நடிகை

Rajini is a film actress who has been vaccinated against corona

கொரோனா, உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பலிகொண்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் ஊரடங்குகளை கடைபிடித்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு தற்போது நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளன.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷிரோட்கர் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார். இவர் 1990-களில் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடித்த ‘ஹம்’ என்ற இந்தி படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் இருக்கிறார். அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தனக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், அதற்காக துபாய் அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஷில்பா ஷிரோட்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இந்திய நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.