தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக வியாபாரமுள்ள நடிகராகவும் கடந்த 35 ஆண்டுகளாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்துடன் போட்டி போடுவது மிகவும் கடினமான ஒன்றாக தான், இளம் நடிகர்களுக்கும் சவாலாக விளங்கி வருகிறது.
அப்படிப்பட்ட ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம் ஒன்றின் வியாபாரத்தை விட இளம் நடிகர் ஒருவரின் வியாபாரம் அதிகமாக இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மனிதன். இந்த படத்தின் வெற்றியை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனைகளை சுதேய்த்து அசத்தியது.
தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் இதுவரை வந்த படங்களை விட அதிக அளவு வியாபாரமான படமாகவும் மனிதன் கருதப்பட்டது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த ராம்கி மற்றும் அருண்பாண்டியனின் இணைந்த கைகள் படம் குறிப்பிட்ட செங்கல்பட்டு ஏரியாவில் ரஜினி படத்தின் வியாபாரத்தை விட அதிகமாக இருந்து, அவரின் வியாபாரத்தை தோற்கடித்தாம்.