Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினி 171 படத்தின் லேட்டஸ்ட் தகவல் பகிர்ந்த ரஜினிகாந்த்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.

Rajinikanth 171 movie latest update
Rajinikanth 171 movie latest update