தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி நெல்சன் என்னை சந்தித்து கதை சொன்னதும் எனக்கு பிடித்தது, ஒரு ப்ரோமோ காட்டியதும் இன்னும் நம்பிக்கை அதிகமானது.
அதன் பிறகு பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் பலரும் நெல்சன் நமக்கு தேவையா? என கேட்டார்கள். ஒரு நல்ல இயக்குனர் தோற்கக் கூடாது, அந்த படம் தோல்வி அடைந்ததற்கு சரியான கேஸ்டிங்கை தேர்வு செய்யாதது கூட இருக்கலாம் என்று சொன்னேன்.
ரஜினி இவ்வாறு பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக நடிகர்களின் தேர்வு தவறாக இருக்கலாம் என்று சொன்னது இன்னும் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது. விஜய் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடித்து விட்டார் என்பதால் ரஜினி இவ்வாறு பேசியதாக ரசிகர்கள் தற்போது வசை பாட தொடங்கி உள்ளனர்.