Tamilstar
News Tamil News

ஜெயராஜ், ப்னிக்ஸ் மரணத்திற்கு ரஜினிகாந்த் கடும் தாக்கு, டுவிட்டரே அதிர்வு

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் அனைத்து கடைகளையும் திறந்து வைக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறித்த நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்திருந்தாக செல்போன் உரிமையாளர்களான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்தே கொன்றனர்.

இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இதுவரை மௌனம் காத்துவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் ‌ நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

மேலும் #சத்தியமாவிடவேகூடாது என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.