நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது மகள், மருமகள் மற்றும் பேரனுடன் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் அப்போது எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது எப்போது என்று தெரியவில்லை.
மேலும் ஜூன் 26 ஆம் தேதி அவர் அந்த அபராதத்தை செலுத்தியதற்கான ரசித்தும் வெளியாகியுள்ளது.