தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்கும் “லால் சலாம்” திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் டைட்டில் போஸ்டர் உடன் அன்னையில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதல்முறையாக நடிகர் ரஜினி கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் விக்ராந்தின் அப்பாவாக ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rajinikanth-character-in-lal-salam-movie