தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மயில்சாமி.
பல்வேறு நடிகர்களுடன் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ள இவருக்கு 57 வயதாகும் நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தது ரசிகர்கள், திரையுலக பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி பூஜையில் ஈடுபட்ட மயில்சாமி அதிகாலையில் உயிர் இழந்தார். இந்த நிலையில் மயில்சாமியின் நிறைவேறாத ஆசை குறித்து பேசியுள்ளார் ட்ரம்ஸ் சிவமணி.
அதாவது சென்னையில் உள்ள மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு ரஜினியை அழைத்து வந்து அவர் கையால் அங்கு இருக்கும் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
டிரம்ஸ் சிவமணியின் பேச்சை கேட்ட ரசிகர்கள் மயில்சாமிக்காக ரஜினி இதை செய்ய வேண்டும், அவருடைய ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.
அதற்கேற்றார் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலையில் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து தன்னுடைய நண்பனின் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என பேட்டியளித்துள்ளார்.