கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார், மோகன்லால், தமன்னா உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் வரும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அதற்குள் முடிக்க முடியாது என்பதால் இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.