கோலிவுட் திரை வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெய்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார். சமீபத்தில் டெல்லிக்கு சென்று ரஜினி, மதிய அமைச்சர்களுடன் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி, பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.