Tamilstar
Uncategorized

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்

Rajinikanth left to US

நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சிகிச்சைக்குப் பிறகு 3 வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.