Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆக இருக்கும் ரஜினியின் மாஸ் திரைப்படம். வைரலாகும் சூப்பர் தகவல்

rajinikanth-movie-re-release-in-telugu-latest-news

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் 100 கோடி வசூலித்த முதல் திரைப்படமாக பெருமை பெற்ற “சிவாஜி” திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

rajinikanth-movie-re-release-in-telugu-latest-news
rajinikanth-movie-re-release-in-telugu-latest-news