சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படம் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. முற்றிலும் கொரோனா நீங்கிய பின் பட வேலைகள் தொடங்கினாலும் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் சூழ்நிலையே.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை லீலா பேலசில் ரஜினி அரசியல் குறித்து தன் மனநிலையை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சியும், அலையும் வரட்டும் அரசியலுக்கு வருகிறேன் என கூறியிருந்தார். இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை’ என, அவரது ரசிகர் பெருமக்கள் போஸ்டர்கள் ஒட்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார். கட்சி தொடங்கும் முடிவில் அவர் பின் வாங்கமாட்டார். கொரோனா இல்லாதிருந்தால் அவர் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தியிருப்பார்.
அதற்கான முடிவை ஏற்கனவே அறிவித்த நிலையில் அவர் கட்சி தொடங்கியது முதல் மாநாடு மதுரையில் நடைபெற வாய்பிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.