Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மோடி தாயாருக்கு இரங்கல் தெரிவித்து ரஜினி போட்ட பதிவு

rajinikanth post viral update

பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

நரேந்திர மோடி – ஹீராபென் மோடி இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்… அம்மா!” என்று பதிவிட்டுள்ளார்.