Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 170 குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

rajinikanth-thalaivar-170-movie-update,rajinikanth,thalaivar-170-movie,update,ரஜினிகாந்த்,ஜெயிலர் , rajinikanth-thalaivar-170-movie-update

கோலிவுட் திரையுலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

அதனை தற்போது நிறைவு செய்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 170 ஆவது திரைப்படத்தில் நடிக்க கவனம் செலுத்த இருக்கிறார். இப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் டிஜே ஞானவேல் ராஜா இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக தலைவர் 170 திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

rajinikanth-thalaivar-170-movie-update
rajinikanth-thalaivar-170-movie-update