Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கபில் தேவுடன் இணைந்து நடிப்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட ரஜினிகாந்த்.

rajinikanth-tweet-about-kapildev

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்து வரும் இதில் மொய்தீன் பாய் என்னும் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருக்கும் ரஜினிகாந்துடன் இப்படத்தில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் இணைந்து நடித்து வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து “இந்தியாவை முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பெருமையும் பாக்கியமும் ஆகும். எனக் குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.