சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவரும் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வருகிறார்.
கொரோனாவுக்கு எதிராக போராடும் விதமாக சமூக விலகலை கடைபிடிக்கும் மாறும், சுகாதாரத்துடன் ஆரோக்கியமாக இருக்குமாறும் அவர் மக்களை வலியுறுத்தினார்.
அண்மையில் தமிழக அரசு மதுபான கடைகளை திறந்ததற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.
இந்நிலையில் ரஜினி இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என பதிவிட்டிருந்தார்.