Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரிலீஸாகி 21 தினங்களில் OTT-யில் வெளியான அண்ணாத்த திரைப்படம், செம கடுப்பில் ரசிகர்கள்..

Rajinikanth's Annaatthe now streaming on OTT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் உலகம் முழுவதும் வெளியான இப்படம் அனைவரிடமும் எதிர்மறையான விமரசங்களையே பெற்றது.

ஆனால் அண்ணாத்த திரைப்படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர் என்றே கூறலாம்.

அதன்படி வெளிநாட்டு வசூலில் அண்ணாத்த திரைப்படம் சொதப்பினாலும், தமிழகத்தில் நல்ல வசூலையே பெற்றுள்ளது.

இதனிடையே அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 21 நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அப்படம் Netflix மற்றும் Sun NXT-யில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும்போதே OTT தளத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளதால், ரஜினியின் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர்.