பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நாளை மாலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
அதன் படப்பிடிப்பு இன்று காலையில் துவங்கி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகளை பெற்று, நிரூப் ஐந்தாவது இடத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அமீர் நான்காவது இடத்தையும், பாவ்னி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்நிலையில், மிஞ்சியிருந்த ராஜு மற்றும் பிரியங்கா இருவரில், மக்களிடம் இருந்து பல லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ராஜு.
அதைவிட குறைவான வாக்குகளை பெற்று பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளதை தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Champions of this season#biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/87gDtVsH2L
— Imadh (@MSimath) January 15, 2022