பட்டாஸ் படத்திற்கு பின் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு, தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. ஊரங்கிற்கு பின் வெளியீட்டு வேலைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ஜகமே தந்திரம். இதில் தனுஷுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், ஹாலிவுட் சினிமா நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட என்னும் பாடல் கடந்த ஜூலை 28ல் தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக Youtube ல் வெளியானது. தற்போது அப்பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.