தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை ரக்ஷன் மற்றும் நிஷா இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர். இதனை இடத்தில் இரண்டாவது சீசனில் இருந்து ரக்ஷன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ரூபாய் ஒரு லட்சம் சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னதாக ரக்ஷன் ஜாக்குலின் உடன் சேர்ந்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.