தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் நாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்து வர அவருக்கு ஜோடியாக ரட்சிதா நடித்து வந்தார்.
ஆனால் கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார். இது மட்டும் தான் காரணம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அது மட்டும் காரணமில்லை என தெரியவந்துள்ளது.
ஆமாம் விஜய் டிவி இல்லாமல் புதிய தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய சில புகைப்படங்களை வெளியிட்டு அவர் ரசிகர்களை விஷயம் என்னவாக இருக்கும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என டுவிஸ்ட் வைத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram