தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK,ஸ்பைடர் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் குறித்த சுவாரசியமான சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், இந்தியன் 2 வில் 90 வயது முதியவராக நடிகர் கமல் நடித்து வருவதாகவும், இதற்காக அவருக்கு மேக்கப் போட மட்டும் 5 மணி நேரம் ஆகும் என்று கூறி இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் தங்களுக்கு முன்னாள் வந்து மேக்கப் போட்டுக் கொள்வார். ஷூட்டிங் முடிந்த பின்பு அவருக்கு அந்த மேக்கப்பை கலைக்க 2 மணி நேரம் ஆகும். ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சினிமாவில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்று சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
