Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவர் ராம் சரண் குறித்து மனம் திறந்து பேசிய உபாசனா.வைரலாகும் தகவல்

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்றதுடன் அதில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது.

ராம்சரணுக்கும் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவரான பிரதாப்ஜி ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் ஆகி 11 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்ததால் சிரஞ்சீவி குடும்பமே கொண்டாடி மகிழ்ந்தது.

இந்நிலையில் உபாசனா தனது கணவர் ராம்சரண் பற்றி மனம் திறந்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என் கணவர் ராம்சரண் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஏன் என்றால்நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கதாநாயகிகளுடன் இப்படி நடித்துதான் ஆக வேண்டுமா? என்று பல முறை அவரிடம் கேட்டுள்ளேன். அதற்கு ராம்சரண் இது எனது தொழில். இப்படித்தான் இருக்கும் என எனக்கு புரிய வைத்தார்.இப்போதெல்லாம் சரியாகிவிட்டது. ஆரம்பத்தில் எனக்கு புரியவில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு உலகில் வாழ்ந்து வந்தோம். என்னைபுரிந்து கொண்டு எனக்காக அனைத்தையும் புரிய வைத்து அவர் என்னை விட சிறந்தவராக இருக்கிறார். மேலும் குழந்தை வளர்ப்பில் நாங்கள் இருவரும் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்று கூறினார்.

Ram Charan wife latest speech Viral
Ram Charan wife latest speech Viral