இந்தியத் திரையுலகில் சர்ச்சைக்குரிய இயக்குனராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் தமிழில் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றியை தரவில்லை.
தற்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க வித்தியாசமான மார்க்கமான கதைகளை தேர்ந்தெடுத்து படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இவர் பேசியது படத்தால் நிறைய பாலிவுட் படங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். குறிப்பாக அஜய் தேவ்கன் போன்ற நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு தென்னிந்தியத் திரைப்படம் உலகம் முழுவதும் இப்படி இரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது வியக்கத்தக்கது. இது தென்னிந்திய சினிமாவின் பலத்தை காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
