தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
அதன்படி சனிக்கிழமையான நேற்று நிகழ்ச்சி இருந்து ராம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராம் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் எட்டு வாரங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து இவர் கிட்டத்தட்ட 9 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து ஆயிஷா வெளியேற்றப்பட உள்ளார் என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.