பிரபல தமிழ் நடிகர் ராமராஜனுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராமராஜன். நடிகை நளினியை காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் இவர் அரசியலில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். திருச்செந்தூர் தொகுதியின் எம்பி ஆகவும் இருந்தவர்.
சமீபத்தில் இவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் கொரானா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ராமராஜன் நலமுடன் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.