நடிகர் ரமேஷ் திலக் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை திரைப்படத்தில் முதலில் தோன்றியுள்ளார்.
அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தின் மூலம் இவர் மிக பெரிய அளவில் பிரபலமானார். அதன்பின் பல திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக விஸ்வாசம், ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கும் இவரின் மனைவி நவாலட்சுமிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இத்தனை உற்சாகமாக நடிகர் ரமேஷ் திலக் “எனக்கு தலைவன் பிறந்து இருக்கிறான்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எனக்கு ஒரு #தலைவன் பிறந்து இருக்கிறான்❤️ pic.twitter.com/SZ5bbeRvul
— Ramesh Thilak (@thilak_ramesh) July 30, 2020
ramesh thilak blessed Baby Boy