தமிழ் சினிமாவில் நாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரம்யா கிருஷ்ணன்.
இவர் இயக்குனர் வம்சி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 21 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சமீப நாட்களாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து ரம்யா கிருஷ்ணன் இடம் கேள்வி எழுப்ப லூசு மாதிரி பேசாதீங்க என பதிலடி கொடுத்து இது அனைத்தும் வதந்தி என உறுதி செய்துள்ளார்.
