உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ், கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார்.
இதன் ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே கூறலாம்.
தற்போது வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்படவில்லை, ஆனால் வரும் அக்டோபர் 4 தேதி அன்று ஒளிபரப்பாகும் என ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு இருப்பது, இதில் கலந்து கொள்ளப்போகும் நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள தான்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் கலந்து கொள்ளவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரை தற்போது அந்நிகழ்ச்சிகாக தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் நடிகை ஷிவானியும் தனிமைப்பட்டு உள்ளதாகவும் அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.