தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராணா மற்றும் மிஹீகாவின் திருமணம் அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகளால் மிக முக்கிய உறவினர்களும், குறிப்பிட்ட சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையால் பலர் திருமணத்தை நேரலையில் கண்டு சமூகவலைதளங்களில் வாழ்த்து அனுப்பினர்.
50 பேர் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்ற போதிலும் ஆடம்பரத்திற்கு குறைவில்லை. இந்நிலையில் ஆந்திராவின் பாரம்பரிய Ponduru காட்டன் உடையில் எளிமையாக குடும்பத்தார் அனைவரும் தோன்றி பலரையும் கவர்ந்தனர்.
இதில் நடிகர் வெங்கடேஷ், ராணாவின் தந்தை சுரேஷ் டகுபதி, நடிகை சமந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.